96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
போதையில் மொத்தத்தையும் உளறிய கோபி! அதிர்ச்சியில் துடிதுடித்த பாக்கியா! வைரலாகும் பரபரப்பு வீடியோ!!
விஜய் டிவியில் மிகவும் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் ஒளிபரப்பாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த தொடர் பாக்கியலட்சுமி. இல்லத்தரசியின் கதையை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகிவரும் இத்தொடருக்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
பாக்கியலட்சுமி தொடரில் மனைவிக்கு தெரியாமல் தனது காதலி ராதிகாவுடன் தொடர்பு வைத்திருக்கும் கோபி கதாபாத்திரத்தில் சதீஷ் என்பவர் நடித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த எபிசோடுகள் ராதிகாவிற்கு கோபி குறித்த உண்மை தெரிய வருவது போன்ற அதிரடித் திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் தற்போது புதிய ப்ரொமோ ஒன்று வெளியாகி மக்கள் மத்தியில் மேலும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. அதாவது அந்த ப்ரமோவில் கோபி குடிபோதையில் வீட்டிற்கு வந்து தூக்கத்தில் தனக்கு மற்றொரு பெண்ணுடன் தொடர்பு உள்ளது என்ற உண்மையை உளறுகிறார். இதனைக் கேட்டு பாக்கியலட்சுமி அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி மக்களிடம் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.