96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
கோபியின் விருது விழாவில் ராதிகாவிற்கு ஏற்பட்ட அவமானம்.! கெத்து காட்டிய பாக்கியா.! வைரலாகும் மாஸ் வீடியோ!!
பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற தொடர் பாக்கியலட்சுமி. இல்லத்தரசிகள் மத்தியில் இத்தொடர் பெருமளவில் பிரபலமடைந்துள்ளது. இந்த தொடரில் கோபி தனது மனைவி பாக்கியாவிற்கு தெரியாமல் காதலியுடன் தொடர்பு வைத்திருப்பார்.
மேலும் பாக்கியாவிற்கு துரோகம் செய்து அவரிடமிருந்து விவாகரத்து பெற்று தற்போது ராதிகாவை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் ரசிகர்கள் செம கடுப்பில் அவரை விளாசி வருகின்றனர். தற்போது பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோரஸ் தொடர்களின் மகாசங்கமம் ஏற்பட்டுள்ளது.
இரு தொடர் குடும்பத்தினரும் ஒன்றாக கொடைக்கானல் சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு கோபியும், ராதிகாவும் ஹனிமூன் சென்றுள்ளனர். இந்த நிலையில் கோபி குடும்பத்தினரால் ராதிகா
பலவிதமான பிரச்சனைகளை சந்திக்கிறார். கொடைக்கானலில் கோபிக்கு விருது வழங்கப்படுகிறது. அங்கு மனைவி எனக்கூறி பாக்கியலட்சுமியை அழைக்கின்றனர். அப்பொழுது ராதிகா அவமானத்தில் கூனி போகிறார். இந்த ப்ரமோ வீடியோ வைரலாகி வருகிறது.