96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
சும்மா லெப்ட் ரைட் வாங்கிவிட்டு, பாக்கியலட்சுமி எடுத்த அதிரடி முடிவு.! அதிர்ச்சியில் ஆடிப்போய் நின்ற கோபி! வைரலாகும் வீடியோ!!
விஜய் டிவியில் தற்போது மிகவும் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாக்கியலட்சுமி. இந்த தொடரை ரசிகர்கள் மிகவும் விரும்பி பார்த்து வருகின்றனர். மேலும் ஒரு இல்லத்தரசியின் கதையை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகிவரும் இந்த தொடருக்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
பாக்கியலட்சுமி தொடரில் பாக்கியலட்சுமியின் கணவராக நடிக்கும் கோபி மனைவிக்கு தெரியாமல் தனது காதலி ராதிகாவுடன் தொடர்பு வைத்திருப்பார். கடந்த எபிசோடுகளில் இந்த உண்மை பாக்கியலட்சுமிக்கு தெரியவந்து பரபரப்பான பல திருப்பங்கள் நடைபெற்றது. இந்த நிலையில் தற்போது புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
அதில் குடும்பமே கதி என இருந்த பாக்கியலட்சுமி மிகவும் தைரியமாக நீதிமன்றத்திற்க்கு சென்று கணவர் கோபிக்கு விவாகரத்து கொடுத்துள்ளார். பாக்கியலட்சுமியின் திடீர் தைரியம் மற்றும் அதிரடியான முடிவை கண்டு கோபி அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த வீடியோ வைரலான நிலையில் இனி பல திருப்பங்கள் ஏற்படும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.