96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
செம ஹேப்பியாக திருமணத்தை முடித்த கோபி! அவரது அம்மா கொடுத்த பேரதிர்ச்சி! வைரலாகும் பரபரப்பான வீடியோ!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்ற தொடர் பாக்கியலட்சுமி. இத்தொடருக்கு குடும்பத் தலைவிகள் மத்தியில் மாபெரும் ஆதரவு உள்ளது. இந்த தொடரில் கோபி தனது மனைவியான பாக்கியலட்சுமிக்கு துரோகம் செய்துவிட்டு, முன்னாள் காதலியான ராதிகாவை திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
கணவனின் துரோகம் தெரியவந்த நிலையில் அவருக்கு விவாகரத்து கொடுத்து விட்டு பாக்யா தனது சமையல் வேலைகளில் கவனம் செலுத்துகிறார். இந்நிலையில் ராதிகா மற்றும் கோபிக்கு கோலாகலமாக திருமணம் நடைபெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் தனது கணவரின் திருமணத்திலேயே சமைக்கும் ஆர்டரும் பாக்யாவிற்கு கிடைத்துள்ளது. இந்த நிலையில் கோபியின் திருமணம் குறித்த தகவல் அறிந்ததும் அவரது தந்தை அங்கு விரைந்து திருமணத்தை நிறுத்த முயற்சி செய்வார்.
ஆனால் கோபி அவரை வெளியே விரட்டி விட்டு திருமணத்தை நடத்துகிறார். இந்த நிலையில் தற்போது புதிய பரபரப்பான ப்ரோமோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் திருமணத்தை நிறுத்த கோபியின் அம்மா, அப்பா மற்றும் மகள் இனியா ஓடி வருகின்றனர். ஆனால் அதற்குள் திருமணம் முடிந்து விடவே அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த கோபியின் அம்மா அவருக்கு சாபம் கொடுக்கிறார். பின்னர் இனிமேல் உனக்கும் எனக்கும் எந்த உறவும் கிடையாது, எனது மருமகளுக்கும், பேரப் பிள்ளைகளுக்கும் நாங்கள் இருக்கிறோம் என்று கூறிவிட்டு அங்கிருந்து கோபமாக செல்கிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.