96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
என்ன இப்படி சொல்லிட்டாரே.! கோபியின் உண்மைமுகத்தை கண்டு ஆடிப்போன ராதிகா.! இனி ஆட்டம் வேற லெவல்தான்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று ஓடிக்கொண்டிருக்கும் தொடர் பாக்கியலட்சுமி. இந்த தொடரில் கோபி தனது மனைவியான பாக்கியலட்சுமியை விவாகரத்து செய்து விட்டு, முன்னாள் காதலியான ராதிகாவை திருமணம் கொண்டு ஒவ்வொரு நாளும் அல்லல் பட்டு வருகிறார்.
தற்போது தொடரில் பாக்கியா மற்றும் ராதிகா இருவரும் ஒரே வீட்டில் உள்ளனர். மேலும் ராதிகா வேலை செய்யும் ஆபீஸில் பாக்கியா கேன்டீன் நடத்தி வருகிறார். அங்கு ராதிகா தொடர்ந்து பாக்கியாவிற்கு தொந்தரவு கொடுத்து வருகிறார். இது தெரியவந்த நிலையில் கோபமடைந்த கோபியின் அம்மா வீட்டில் ராதிகாவை திட்டுகிறார்.
வீட்டிற்கு வந்த கோபியிடம் ராதிகா தன்னை மிரட்டுவதாக முறையிடவே, உடனே கோபி வீட்டிற்கு வந்தாலே ஒரே சண்டை. எல்லாத்திற்கும் நீதான் காரணம். உன்னால என் அம்மாவிற்கு, எனக்கு நிம்மதியே இல்லை. நீ இங்கிருந்து கிளம்பு. நாங்களாவது நிம்மதியா இருக்கோம் என கோபமாக பேசவே, அதிர்ச்சியில் உறைந்த ராதிகா வீட்டை விற்று வெளியேறுகிறார். இந்த ப்ரோமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.