96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
பரியேறும் பெருமாளுக்கு குவியும் பிரபலங்களின் பாராட்டு!! உற்சாகத்தில் படக்குழு
இயக்குனர் ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர் கயல் ஆனந்தி, யோகிபாபு உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பரியேறும் பெருமாள். இப்படத்தின் அனைத்து வேலைகளும் நிறைவடைந்த நிலையில் இன்று வெளியாக உள்ளது.
இந்நிலையில் சிறப்புக் காட்சியாக சினிமா பிரபலங்களுக்கு இப்படம் நேற்று திரையிட்டு காட்டப்பட்டது. பலரும் படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர்களுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்த வண்ணம் உள்ளனர். இதனால் இப்படம் மிகப் பெரிய வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படத்தைப் பார்த்த நடிகர் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார். படத்தின் கதாநாயகன் கதிருக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதாக தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
Happy for u @am_kathir 👍🏻 https://t.co/oiQ1ULVMj8
— VijaySethupathi (@VijaySethuOffl) September 27, 2018
நடிகர் சித்தார்த் கூறுகையில், படம் சிறப்பாக உள்ளது படத்தின் இயக்குனர் அருமையாக தனது பணியினை செய்திருக்கிறார். படம் முடிந்த பிறகும் பல மணி நேரம் அந்த படத்திலேயே என்னை பயணிக்க வைத்தது. தமிழ் சினிமாவின் மாற்று பாதையில் பயணித்து இருக்கும் பட குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
#PariyerumPerumal begins a bright new journey in #TamilCinema for a brilliant director @Mari_selvaraj. It is that rare film that is entirely made from reality. It affected me deeply and stayed with me for many hours after it ended. @am_kathir is sensational! Go watch IT! #Karuppi
— Siddharth (@Actor_Siddharth) September 26, 2018
இயக்குநர் ராம் கூறுகையில், தமிழ் சினிமாவில் கடந்த பத்து வருடங்களில் வெளிவந்த படங்களில் மிக சிறந்த படம் என்று கூறுவேன். இப்படத்தில் திருநெல்வேலியின் அழகை மிகவும் நேர்த்தியாக காட்டியிருக்கிறார் இயக்குனர். அரசியல் ரீதியான நல்ல உணர்வுப்பூர்வமான சிறந்த படமாக அமைந்திருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.
தொடர்ந்து யோகிபாபு கூறுகையில், ஆண்டவன் கட்டளை படத்திற்கு பிறகு தரமான படத்தில் நடித்து இருப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தொடர்ந்து இது போன்ற குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆவலாக உள்ளேன்.