96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
பிரபல தமிழ் நடிகை வீட்டில் இலட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு.. அதிர்ச்சியில் திரையுலகம்.!
தமிழில் நிமிர்ந்து நில், என்னை அறிந்தால் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலம்டைந்தவர் நடிகை பார்வதி நாயர். இவர் சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், இவரது வீட்டில் இரண்டு வருடமாக வேலை செய்து வந்த நபர் அதிக விலை மதிப்புடைய இரண்டு கைக்கடிகாரங்கள், செல்போன் மற்றும் லேப்டாப் உள்ளிட்டவற்றை திருடிவிட்டதாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மேலும், ரூ.6 லட்சம் மதிப்பிலான கைக்கடிகாரம், ரூ.3 லட்சம் மதிப்பிற்கான கைக்கடிகாரம், ரூ.50 ஆயிரம் மதிப்புடைய லேப்டாப் மற்றும் செல்போன் உள்ளிட்ட பொருட்களை திருடிசென்றதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார். அவரது புகாரை ஏற்றுக்கொண்ட நுங்கம்பாக்கம் காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.