96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
மிரட்டலாக வெளியான பரியேறும் பெருமாள் கதிர் நடிக்கும் சத்ரு படத்தின் ட்ரைலர்!
தமிழ் சினிமாவில் வாரம் தோறும் பலவிதமான படங்கள் வெளியாகின்றன. ஆனால் அவற்றில் ஒருசில படங்களே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகின்றது. பலகோடிகளில் செலவுசெய்து எடுக்கப்படும் படங்கள்கூட சில சமயங்களில் தோல்வியடைகின்றன. அதேபோல, குறைந்த செலவில் எடுக்கப்படும் படங்கள் சில சமயங்களில் மாபெரும் வெற்றிபெறுகிறது.
அதில் ஒரு படம்தான் பரியேறும் பெருமாள். மதயானை கூட்டம் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறுமுகமான கதிர் பரியேறும் பெருமாள் படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். இவரது இயல்பான நடிப்பு அந்த படத்தின் மாபெரும் வெற்றிக்கு ஒரு காரணமாக அமைந்தது. படத்தில் கதிருக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்திருந்தார்.
தற்போது பரியேறும் பெருமாள் கதிர் சத்ரு என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். படம் இன்னும் சில மாதங்ளைல் வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த ட்ரைலர்.