குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
ரஜினி ரசிகர்களுக்கு அடுத்தடுத்து ட்ரீட்! பேட்ட சிங்கிள் ட்ராக் குறித்து சன் பிக்சர்ஸ் ட்வீட்
கடந்த வியாழன் அன்று ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான பிரம்மாண்ட திரைப்படம் 2.0 ரஜினி ரசிகர்களை உற்சாகத்தின் உச்சத்தில் வைத்துள்ளது. அதே உற்சாகத்தில் ரஜினியின் அடுத்த படமான பேட்ட குறித்த அப்டேட்டை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.
ரஜினி நடிக்கும் 'பேட்ட' திரைப்படம், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில் வரும் பொங்கலுக்கு படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெறும் 50 நாட்கள் இடைவெளியில் ரஜினியின் இரண்டு படங்கள் அடுத்தடுத்து வெளியாவதால் ரஜினியின் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
பேட்ட படத்தில் ரஜினியுடன் விஜய் சேதுபதி, சிம்ரன், திரிஷா, பாபி சிம்ஹா, சசிகுமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசைக்குயில் உருவாகியுள்ள இந்த படத்தின் பாடல்கள் டிசம்பர் 9ம் தேதி வெளியாகும் என 'சன் பிக்சர்ஸ்' ஏற்கனவே அறிவித்துள்ளது.
இந்நிலையில் ரஜினிகாந்த் குத்தாட்டம் போட்டுள்ள இந்தப்படத்தின் மரண மாஸ் சிங்கிள் ட்ராக் வரும் டிசம்பர் 3-ம் தேதி வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த மரண மாஸ் அறிவிப்பை கேட்ட ரஜினியின் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
#PettaFirstSingle - #MaranaMass releasing Monday at 6pm!
— Sun Pictures (@sunpictures) December 1, 2018
The much awaited #ThalaivarKuththu song in 2 days !@rajinikanth @karthiksubbaraj @anirudhofficial @VijaySethuOffl@SimranbaggaOffc @Nawazuddin_S @SasikumarDir @trishtrashers pic.twitter.com/RbP3QPBJNX