ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
அதிர்ச்சி.! பூஜா ஹெக்டேவிற்கு கொலை மிரட்டல் விடுத்த புகைப்பட கலைஞர்..
2012ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக "முகமூடி" படத்தில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. இதையடுத்து தெலுங்கு மற்றும் ஹிந்திப் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் பல வருடங்களுக்கு பிறகு விஜயுடன் "பீஸ்ட்" படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் பூஜா ஹெக்டே துபாயில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மும்பையில் இருந்து சென்றுள்ளார். அப்போது அந்த ஏதோ நிகழ்ச்சியில் ஒரு விவாதம் காரசாரமாக நடைபெற்றதாகவும், அதனால் கோபமடைந்த பூஜா ஹெக்டே, நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி விட்டதாகவும் தெரிகிறது.
இதையடுத்து பிரபல பாலிவுட் புகைப்பட கலைஞர் வைரல் பஹானி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், துபாய் நிகழ்ச்சியில் நடைபெற்ற வாக்குவாதம் காரணமாக பூஜா ஹெக்டேவிற்கு கொலைமிரட்டல் விடுக்கப்படுவதாக கூறியிருந்தார்.
இதுகுறித்து பூஜா ஹெக்டே எதுவும் கருத்து தெரிவிக்காத நிலையில், அவரது குழுவில் உள்ள ஒருவர், "இது முற்றிலும் தவறான தகவல்" என்று மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்துள்ள ரசிகர்கள், பூஜா ஹெக்டேவிற்கு சமூக வலைதளத்தில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.