96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
Pithala Maathi Movie: ஜூன் 14ம் தேதி திரைக்கு வருகிறது பித்தல மாத்தி திரைப்படம்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
ஸ்ரீசரவணா பிலிம் ஆர்ட்ஸ் தயாரிப்பில், ஜி சாரா தயாரித்து வழங்கும் திரைப்படம் பித்தல மாத்தி (Pithala Maathi). மணிகா வித்யா இயக்கத்தில், மோஸ் இசையில், வெங்கட் ஒளிப்பதிவில், ஏஎல் ரமேஷ் எடிட்டிங்கில் படம் உருவாகி இருக்கிறது.
நடிகர்கள் தம்பி ராமையா, பால சரவணன், வித்யுராமன், மதுரை முத்து உட்பட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றனர். மோகன்ராஜ், கவிஞர் சாரதி வரிகளில் உருவாகியுள்ள இப்படம், காமெடி கதையை மையமாக கொண்டு தயாராகியுள்ளது.
இதையும் படிங்க: வெற்றிப்படமான கருடன்.. இயக்குனர், இசையமைப்பாளருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சூரி.! குவியும் பாராட்டுக்கள்.!
ஜூன் 14 ரிலீஸ்
கடந்த சில மாதங்களாகவே படத்தின் படப்பிடிப்பு என்பது விறுவிறுப்புடன் நடைபெற்று வந்த நிலையில், படத்தின் வெளியீடு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி தற்போது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் ஜூன் மாதம் 14 ம் தேதி திரைக்கு வருகிறது.
பட வெளியீடுக்கு ஒரு வாரமே எஞ்சி இருப்பதால், படக்குழு விளம்பர பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இதையும் படிங்க: கருடன் திரைப்படம் பார்க்க நரிக்குறவர்களுக்கு அனுமதி மறுப்பு? கடலூரில் அதிர்ச்சி.. கோட்டாட்சியர் அசத்தல் செயல்.!