96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
வெற்றிப்படமான கருடன்.. இயக்குனர், இசையமைப்பாளருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சூரி.! குவியும் பாராட்டுக்கள்.!
வெற்றிமாறனின் எழுத்தில், துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் கருடன் (Garudan). இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். படத்தில் நடிகர்களாக முக்கிய கதாபாத்திரத்தில் சசிகுமார் மற்றும் சூரி நடிக்க, இவர்களுடன் உன்னி முகுந்தன், சமுத்திரகனி உட்பட பலரும் நடித்துள்ளனர்.
பாராட்டுகளை குவிக்கும் சூரி
மே 31ம் தேதியான நேற்று திரையரங்கில் வெளியான இத்திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்கள் கொண்டாடும் திரைப்படமாக மாறியுள்ள கருடன் படத்தில், நடிகர் சூரியின் நடிப்பு பெரிதளவில் பாராட்டப்பட்டுள்ளது. இதனால் சூரியும் மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறார்.
இதையும் படிங்க: கருடன் திரைப்படம் பார்க்க நரிக்குறவர்களுக்கு அனுமதி மறுப்பு? கடலூரில் அதிர்ச்சி.. கோட்டாட்சியர் அசத்தல் செயல்.!
வசூல் சாதனையில் கருடன்
படம் வெளியான முதல் 5 நாட்களில் மட்டும் கருடன் திரைப்படம் ரூ.20 கோடியை கடந்து வசூல் செய்து சாதனை படைத்தது. தொடர்ந்து படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடி வருவதால், வசூல் தொகை மேலும் அதிகரிக்கும் என தெரியவந்துள்ளது.
ஆளுயுர மாலை அணிவித்து பாராட்டு
இந்நிலையில், படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு உறுதுணையாக இருந்த படத்தின் இயக்குனர் துரை செந்தில்குமார், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன் ஆகியோருக்கு பிரம்மாண்டமான மாலை அணிவித்து நடிகர் சூரி தனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்தார்.
இதையும் படிங்க: அனல்பறக்கும் வைப்.. சூரியின் கருடன் பட 'ஒத்தப்பட வெறியாட்டம்' பாடல் வெளியீடு.. கேட்டு மகிழுங்கள்.!