ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
பிக்பாஸ் சீசன்-4 ல் களமிறங்கும் பிரபல நடிகை பூனம் பாஜ்வா; வெளியான தகவல்.!
சமூக வலைதளங்களில் தற்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பவர் நடிகை பூனம் பஜ்வா. இந்நிலையில் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனில் பூனம் பஜ்வா போட்டியாளராக கலந்து கொள்கிறார் என்று பேச்சு கிளம்பியது.
பரத்தின் சேவல் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் பூனம் பஜ்வா. ஜீவாவின் தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை, ஜி.வி. பிரகாஷின் குப்பத்து ராஜா, அரண்மனை 2, முத்தின கத்திரிக்காய் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
பிக்பாஸ், ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று பெருமளவில் ரசிக்கப்பட்ட நிகழ்ச்சி. இதற்கென ஏராளமான ரசிகர் கூட்டமே உள்ளது. இந்த நிகழ்ச்சி முதலில் இந்தியில் தொடங்கப்பட்டது. மேலும் இந்தியில் இதுவரை 13 சீசன்கள் முடிந்துள்ளது. இவ்வாறு பல ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்து வந்த இந்த நிகழ்ச்சி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மற்றும் தெலுங்கிலும், அதனைத்தொடர்ந்து மலையாளத்திலும் ஒளிபரப்பபட்டது.
தற்போது கொரோனா பரவல் அச்சுறுத்தல் இல்லாமல் இருந்திருந்தால், தமிழ் மற்றும் தெலுங்கில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்திருக்கும். இந்த நிலையில் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனுக்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் நிகழ்ச்சி தொடங்க உள்ளதாகவும் சமீபத்தில் டீசர் வெளியானது.
பூனம் பஜ்வா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு நெருக்கமான ஒருவர் உறுதி செய்துள்ளார். பிக் பாஸ் வீட்டில் இருக்க பூனம் பஜ்வாவுக்கு ரூ. 45 லட்சம் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். அடுத்த மாதத்தில் இருந்து தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சி டிவியில் ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது.