இந்தியன் 2 படத்தில் ப்ரியா பவானி சங்கருக்கு இப்படி ஒரு கதாபாத்திரமா? அதிர்ச்சியில் ரசிகர்கள்.



Priya bavani shankar acting as 80 years old

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல், சித்தார்த், பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் மிக பிரமாண்டமாக இந்தியன் 2 படம் தயாராகிவருகிறது. பல்வேறு சர்ச்சைகள், பிரச்சனைகளை கடந்து படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துவருகிறது.

இந்நிலையில் இந்தியன் முதல் பாகத்தில் வயசான கமலுக்கு ஜோடியாக சுகன்யா நடித்திருந்தார். தற்போது அந்த காதாபாத்திரத்தில் காஜல் அகர்வால் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் இளமை தோற்றத்தில்தான் நடிப்பதாக காஜல் அகர்வால் தெரிவித்திருந்தார்.

indian 2

இதனால், வயசான கமலுக்கு ஜோடியாக, 80 வயதான பாட்டியாக ப்ரியா பவானி சங்கர்தான் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. பிரமாண்ட படம், நல்ல வாய்ப்பு என்றாலும், ப்ரியா பவானி சங்கர் பாட்டி வேடத்தில் நடிப்பது அவரது ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.