நம்பவச்சு ஏமாத்திட்டாரு! நடிகர் விமல் மீது தயாரிப்பாளர் மோசடி புகார்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!



producer-cheating-complaint-filed-against-actor-vimal

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் விமல் மீது 5 கோடி மோசடி செய்துவிட்டதாக சினிமா தயாரிப்பாளர் ஒருவர் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெரவள்ளூரைச் சேர்ந்தவர் கோபி. 43 வயது நிறைந்த அவர் கப்பல் துறை சார்ந்த தொழில் செய்து வருகிறாராம். மேலும் அரசு பிலிம்ஸ் என்ற பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனம் தொடங்கி நடத்தி வந்துள்ளார். அவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அதில் அவர், கடந்த 2016 ஏப்ரல் 12ம் தேதி நடிகர் விமல் என்னை அணுகி ‘மன்னர் வகையறா’ படத்தை தானே தயாரித்து அதில் கதாநாயகனாக நடிக்க இருப்பதாகவும், அப்படத்திற்கு பணம் கொடுத்து உதவும்படியும் கோரினார். மேலும், படத்தின் லாபத்திற்கான பங்கையும் கொடுப்பதாக உறுதி அளித்தார். அதற்கு நான் தயங்கிய போது களவாணி 2 படத்தை எங்கள் பேனரில் தயாரிக்க உத்தரவாதம் அளித்தார். பின் அவருக்கு வங்கி கணக்கிலும், ரொக்கமாகவும் ரூ.5 கோடி கொடுத்தேன். வாங்கிய பணத்தை படம் வெளியீட்டுக்கு முன்பே கொடுப்பதாக அவர் உறுதியளித்தார். ஆனால் அந்த பணம் கொடுக்கவில்லை.

producer

அவர் தற்போது 10-க்கும் மேற்பட்ட படங்களில் நடிக்க  ஒப்பந்தமாகியுள்ளார். அதற்கு முன் தொகையாக பல கோடி ரூபாய் பெற்ற பிறகும் என்னிடம் வாங்கிய தொகையை கொடுக்காமல் நம்பிக்கை மோசடி செய்து ஏமாற்றுகிறார். மேலும் பணத்தை கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கிறார். எனவே நடிகர் விமல் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து, அவர் எனக்கு தரவேண்டிய ரூ.5 கோடி பணத்தை வசூலித்து தரும்படி வேண்டி கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.