#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சூட்கேஸை வைத்துவிட்டு நைசாக எஸ்கேப்பான தந்தை-மகள்.! விசாரணையில் அம்பலமான திடுக்கிடும் உண்மைகள்!!
ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் 43 வயதுமிக்க பாலசுப்பிரமணியம். இவர் தனது மகளுடன் ரயிலில் ஆந்திராவில் இருந்து சென்னை மீஞ்சூர் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். கையில் பெரிய அளவிலான சூட்கேஸுடன் ரயிலில் இருந்து அவசர அவசரமாக இறங்கிய அவர்கள் அதனை நடைமேடையிலேயே வைத்துவிட்டு சென்றுள்ளனர்.
இதனைக் கண்ட பயணிகள் சிலர் அதனை ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரியின் கவனத்துக்கு கொண்டு சென்ற நிலையில் அவர்கள் தந்தை மற்றும் மகளை பிடித்து அவர்கள் வைத்து சென்ற சூட்கேஸை கைப்பற்றி திறந்து பார்த்துள்ளனர். அதில் 60 வயது மதிப்புதக்க மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்டு சடலமாக இருந்துள்ளார்.
தொடர்ந்து இதுகுறித்து போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டத்தில், மூதாட்டி தனது 17 வயது மகளை பாலியல் தொழிலுக்கு அழைத்ததாகவும், ஆத்திரத்தில் அவரை அடித்து கொலை செய்ததாகவும் கூறியுள்ளார். கொலை செய்யப்பட்டது நெல்லூரை சேர்ந்த ரமணி என்பது தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க: கணவரின் முதல் மனைவிக்கு 50 முறை சதக்., சதக்... துள்ளத்துடிக்க கதறி உயிரிழந்த இளம்பெண்.. பதறவைக்கும் கொடூரம்.!
தொடர்ந்து போலீசார் தந்தை மற்றும் மகளை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில் திடீர் திருப்பமாக அவர்கள் நகைக்காக மூதாட்டியை கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க: பச்சிளம் பிஞ்சுடா அது.. 3 வயது சிறுமி பலாத்காரம், கொன்று புதைப்பு.. 22 வயது இளைஞன் வெறிச்செயல்.!