மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சென்னை: சாலைத்தடுப்பில் மோதி உருக்குலைந்த கார்; சின்னத்திரை நடிகரின் மகன் பரிதாப பலி.!
வீட்டிற்கு திரும்பும் வழியில் ஏற்பட்ட விபத்தில், சின்னத்திரை நடிகரின் மகன் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னையில் உள்ள ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் வசித்து வருபவர் கார்த்திக். இவர் சின்னத்திரை நடிகராக இருக்கிறார். இவருக்கு லித்திஷ் என்ற மகன் இருக்கிறார்.
இதையும் படிங்க: அமரன் படம் எப்படி?.. வெளியானது புளூ சட்டை மாறனின் ரிவியூ..!
தீபாவளியான நேற்று லித்திஷ் தனது நண்பர்கள் இருவருடன் ஓ.எம்.ஆரில் இருக்கும் விளையாட்டு திடலுக்கு சென்றுவிட்டு, பின் மீண்டும் இரவில் வீடு திரும்பிக்கொண்டு இருந்தனர்.
சாலைத்தடுப்பில் மோதி சோகம்
அச்சமயம், வேளச்சேரி பகுதியில் இவர்கள் வந்தபோது, அதிவேகத்தில் வந்ததாக தெரியவருகிறது. இதனால் சாலையின் நடுவே இருக்கும் தடுப்பில் கார் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் காரின் முன்பக்கம் உருக்குலைந்த நிலையில், காரில் பயணம் செய்த லித்திஷ் உட்பட மூன்று பேரும் படுகாயம் அடைந்தனர்.
இவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்த நிலையில், லித்திஷ் பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் மறைவு குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கண்ணே காதல் மொழி பேசுதே.. அடேய் ஜெப்ரி - சவுந்தர்யா.. இப்படித்தான் இருக்கீங்களா?.. லவ்பீகமான பிக் பாஸ் வீடு.!