ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
ஏன் இவ்வளவு கேவலம் , வடசென்னை படத்தை வச்சு செய்த தயாரிப்பாளர்.! இன்னும் என்ன சொல்லியிருக்கார் தெரியுமா?
வெற்றி மாறன் இயக்கத்தில் கடந்த அக்டோபர் 18 ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் வடசென்னை.
வடக்கு சென்னையை மையப்படுத்தி இப்படத்தின் கதை எடுக்கப்பட்டிருந்தது. ஆனால் படத்தில் ஆபாசமான வார்த்தைகளை கொச்சையாக பேசியிருந்ததால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல குற்றச்சாட்டுகள் எழுந்தது.ஆனாலும் படம் வெற்றிகரமாக ஓடி வசூலை அள்ளி கொடுத்தது.
இந்நிலையில் பல படங்களை எடுத்த தயாரிப்பாளர் கே.ராஜன் படத்தின் இயக்குனர் வெற்றி மாறனையும், ஹீரோ தனுஷ் மற்றும் ஹீரோயின் ஐஸ்வர்யா ராஜேஷையும் கடுமையாக விளாசியுள்ளார்.
ஆடுகளம், விசாரணை போன்ற தரமான படங்களை எடுத்த இயக்குனர் ஏன் இப்படியான கேவலமான வார்த்தைகளை பேசி படத்தை எடுக்க வேண்டும்.
ஆண், பெண் குறிகளை ஒரு ஹீரோ ஹீரோயினே கொச்சையாக பேசுவது மிக மோசமானதாக இருக்கிறது. இவ்வாறு இப்படி ஒரு கதையை வெற்றிமாறனால் எடுக்க முடிந்தது? என்ன தைரியம் என கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.