96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
தேர்தலால் உடையப்போகும் குடும்பம்.. அதிரடியாக நடக்கப்போகும் மாற்றம்..! உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் முக்கியமானது ராஜா ராணி. இந்த ராஜா ராணி தொடர் இரண்டாவது சீசனில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், தற்போது நாயகி சந்தியா, நாயகன் சரவணன் வாழ்க்கை எப்படி நகர்கிறது என்பது குறித்த விஷயங்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
சந்தியா எப்படியாவது ஐபிஎஸ் ஆக வேண்டும் என்று முயற்சிப்பதை தொடர்ந்து, திடீரென வியாபார சங்கத் தலைவர் போட்டிக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. அதில் சரவணனை போட்டியிட அனைவரும் கூறும் நிலையில், சூட்சமத்தை பயன்படுத்திக் கொண்ட வியாபார சங்கத் தலைவர் பரந்தாமன் தனது சார்பில் சரவணன் தம்பியை நிற்க வைக்கிறார்.
இதனால் யார் ஜெயிக்கப் போகிறார்கள்?, குடும்பம் இரண்டாக பிளவுபடுமா?, அடுத்ததாக என்ன நடக்கப்போகிறது? என்ற பரபரப்பு எழுந்துள்ளது. இதுகுறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.