தமிழ்நாட்டில் கால் வைக்கும்போதே வந்த சிக்கல்!! யாருக்கும் தெரியாத தகவலை முதல் முறையாக கூறிய ரஜினி!!!



Rajini talks about his entry in tamilnadu

தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் சென்னை வந்த அனுபவம் குறித்து முதல் முறையாக பேசியுள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில்,

தனக்கு படிக்க விருப்பம் இல்லை நான் வேளைக்கு போகிறேன் என தனது அண்ணனிடம் ரஜினி கூறினாராம். ஆனால், நமது குடும்பத்தில் யாரும் படிக்கவில்லை, நீ படித்து IPS அதிகாரியாக வரவேண்டும் என கூறி ரஜினியை ஒரு பெரிய பள்ளியில் அவரது அண்ணன் சேர்த்துவிட்டாராம்.

பள்ளியில் தேர்வு வரும்போது அதற்காக 120 ரூபாய் பணம் கொடுத்து தேர்வு கட்டணத்தை கட்டுமாறு ரஜினியிடம் அவரது அண்ணன் கூறியுள்ளார். ஆனால், தான் தேர்வு எழுதினால் எப்படியும் பெயில் ஆகிவிடுவோம் என நினைத்து அந்த 120 ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு ரயில் ஏறி ரஜினி சென்னைக்கு வந்துவிட்டாராம்.

ரயிலை விட்டு இறங்கியதும் டிக்கெட் பரிசோதகர் ரஜினியிடம் டிக்கெட்டை கேட்டாராம், ஆனால், தான் டிக்கெட் எடுத்ததாகவும், வரும் வழியில் டிக்கெட்டை தவறவிட்டுவிட்டதாகவும் ரஜினி கூறியுள்ளார்.

rajini

ஆனால், இதை டிக்கெட் பரிசோதகர் நம்பவில்லையாம். உடனே அபராதம், ஜெயில் என பரிசோதகர் மிரட்ட அருகில் இருந்த மூட்டை தூக்கும் தொழிலாளர் சிலர் ரஜினிக்காக பணம் செலுத்த முன் வந்துள்னனர். ஆனால், தன்னிடமே பணம் இருப்பதாக தன்னிடம் இருந்த பணத்தை எடுத்து ரஜினி காண்பித்தாராம்.

அதன்பின்னர்தான் டிக்கெட் பரிசோதகர் ரஜினியை நம்பி அவரிடம் பணம் ஏதும் பெறாமல் அவரை அனுப்பி வைத்தாராம். இப்படி தான் சென்னையில் காலடி எடுத்து வைத்ததுமே ஏற்பட்ட சிக்கல் பற்றி ரஜினி நேற்று மேடையில் பேசியுள்ளார்