நடிகர் விஷாலுக்கு என்னதான் ஆச்சு? வெளியானது மருத்துவ அறிக்கை.! விபரம் உள்ளே.!
திருமணமானதை மறைத்த தொகுப்பாளர் ரக்ஷன்!! அவரது மனைவியை பார்த்துருக்கீங்களா!! தீயாய் பரவும் புகைப்படம்!!
பிரபல முன்னணி தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமாக இருப்பவர் விஜே ரக்சன். அவர் தற்போது குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியை மிகவும் நகைச்சுவையாகவும், அனைவரும் ரசிக்கும் வகையிலும் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சிக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
ரக்சன் தொலைக்காட்சி நிகழ்ச்சி மட்டுமின்றி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். அவர் பிரபல நடிகர் துல்கர் சல்மானுடன் இணைந்து கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தா.ர் இப்படத்தில் அவருக்கு இரண்டாம் கதாநாயகனாக ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும் படத்தில் அவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.
தொகுப்பாளரும், நடிகருமான ரக்சன் திருமணமாகாதவர் என ரசிகர்கள் பலரும் எண்ணிய நிலையில் அதுகுறித்து முதன்முறையாக அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பேசியிருந்தார். மேலும் அண்மையில் அவர் தனது மனைவியுடன் எடுத்த புகைப்படத்தையும் இணையத்தில் வெளியிட்டுள்ளார். அதுமட்டுமின்றி திருமணம் குறித்து சொல்லாதது ஏன்? என ரசிகர்கள் பலரும் கேட்டதற்கு, பதிலளிக்கும் வகையில் தினமும் ஸ்டேட்டஸில் எப்படி காதலிக்கிறோம் என்று சொல்வதைவிட.. எப்படி காதலித்தோம் என அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்ததே உண்மையான காதலின் வெற்றி எனவும் அதில் பதிவிட்டுள்ளார்.