குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
தனது சிறுவயது புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ராஷ்மிகா! இந்த பெண்ணா இது என வியந்து வரும் ரசிகர்கள்.
கன்னட நடிகையான ராஷ்மிகா மந்தனா. இவர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான கீதா கோவிந்தம் திரைப்படம் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி தற்போது ஒரு முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
அதனை தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதனை அடுத்து தற்போது தமிழில் நடிகர் கார்த்தியுடன் சுல்தான் என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் அந்த படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் எப்போதும் சமூக வலைத்தள பக்கத்தில் பிஸியாக இருக்கும் ராஷ்மிகா தற்போது தனது சிறுவயது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது அப்புகைப்படம் வைரலாகி வருகிறது.
Chip off the old block✨🐒 pic.twitter.com/6d6Czu7lyP
— Rashmika Mandanna (@iamRashmika) November 2, 2019