குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
பிரபல நடிகையை வடிவேலுடன் ஒப்பிட்டு கலாய்த்த நெட்டிசன்கள்! அதற்கு அந்த நடிகை என்ன கூறியுள்ளார் தெரியுமா?
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தற்போது பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் சுல்தான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார். "இன்கேம் இன்கேம்" பாடலின் மூலம் தமிழகத்தில் பெரிய அளவில் ரசிகர்களை பெற்றுள்ளார் ராஷ்மிகா.
சமீபத்தில் ராஷ்மிகா பட விளம்பரத்திற்காக விதவிதமான உடைகள் அணிந்து போட்டோ ஷூட் நடத்தினார். ஒவ்வொரு புகைப்படத்துக்கும் முகத்தை வெவ்வேறு கோணங்களில் வைத்து போஸ் கொடுத்தார்.
#Rashmika #Vadivel version 😂 #VadiveluForLife pic.twitter.com/v9lrR8fU0g
— Troll Cinema ( TC ) (@Troll_Cinema) February 23, 2020
அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியானதும், அதே தோற்றத்தில் உள்ள நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் புகைப்படங்களை ராஷ்மிகா படத்துடன் இணைத்து சிலர் மீம்ஸ்களை உருவாக்கி வெளியிட்டனர். அந்த புகைப்படங்கள் வடிவேலு கதாபாத்திரங்களின் சாயலில் இருந்ததால் இந்த மீம்ஸ்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது.
இதனை பார்த்த நடிகை ராஸ்மிகா மந்தனா, இந்தப் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இதை “என்னால் ஒத்துக்கொள்ள முடியாது. வடிவேலு சார். நீங்கள் ரொம்ப க்யூட்” என்று குறிப்பிட்டுள்ளார்.
I can’t agree more. 🐒 Vadivelu sir is soooo cuteeee♥😍https://t.co/zeO5EuzvPr
— Rashmika Mandanna (@iamRashmika) February 24, 2020