குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
இதை நான் ஒத்துக்கவேமாட்டேன்! வடிவேலு வெர்சனில் வைரலாகும் மீம்ஸ்! நடிகை ராஷ்மிகாவின் ரியாக்ஷனை பார்த்தீர்களா!
நடிகர் விஜய தேவரகொண்டாவுடன் இணைந்து கீதாகோவிந்தம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கு மற்றும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா. மேலும் அப்படத்தில் இடம்பெற்ற இன்கேம் இன்கேம் பாடல் மூலம் இளைஞர்கள் மத்தியில் கனவுக்கன்னியாக கொடிகட்டி பறந்தார். அதனை தொடர்ந்து அவர் மீண்டும் விஜய தேவரகொண்டாவுடன், டியர் காம்ரேட் என்ற படத்தில் நடித்துள்ளார்.
மேலும் தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு முன்பே இவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளது. அதனை தொடர்ந்து தற்போது ராஷ்மிகா கார்த்தி நடிப்பில் சுல்தான் என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் தமிழில் பல படங்களில் நடிக்கவும் ஆர்வமுடன் காத்திருக்கிறார். மேலும் தெலுங்கில் நிதினுடன் ராஷ்மிகா நடித்த பீஷ்மா படம் தற்போது திரைக்கு வந்து மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் ரஷ்மிகா அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். இந்நிலையில் அவர் சமீபத்தில் வித்தியாசமாக போட்டோசூட் ஒன்றை நடத்தியுள்ளார். அதனை வடிவேலு வெர்சனுடன் இணைத்து நெட்டிசன்கள் மீம்ஸ் உருவாக்கினர்.
அது வைரலான நிலையில் அதனை ரஷ்மிகா ரசித்து பார்த்துள்ளார். மேலும் என்னால் இதனை ஒப்புக்கொள்ள முடியாது. வடிவேலு ரொம்பவும் கியூட்டாக இருக்கிறார் என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
I can’t agree more. 🐒 Vadivelu sir is soooo cuteeee♥😍https://t.co/zeO5EuzvPr
— Rashmika Mandanna (@iamRashmika) February 24, 2020