என்னது.. நடிகர் சூர்யாவிற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதற்கு இதுதான் காரணமா!! தீயாய் பரவும் ஷாக் தகவல்!!



reason-for-surya-affecting-by-corono

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக, ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருக்கும் நடிகர் சூர்யா இறுதியாக சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப்போற்று திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.

அதனைத் தொடர்ந்து நடிகர் சூர்யா அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கும் சூர்யா 40 என்ற படத்தில் நடிக்கவுள்ளார். பின்னர் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்புகள் விரைவில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

surya

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சூர்யா தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று தற்போது நலமுடன் இருப்பதாக தெரிவித்திருந்தார். இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் நடிகர் சூர்யா தனது தீவிர ரசிகர் ஒருவரின் திருமணத்திற்கு நேரடியாக சென்று அங்கு அனைவரிடமும் கைகுலுக்குவது புகைப்படம் எடுப்பது என வழக்கம்போல இருந்துள்ளார்.

அதன்பிறகே அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என தகவல்கள் பரவி வருகிறது. மேலும்  ரசிகர்கள் அனைவரையும் கொரோனா பரிசோதனை செய்ய நடிகர் சூர்யா அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.