18 ஆண்டுகளை நிறைவு செய்த சண்டக்கோழி.! விஷாலின் நெகிழ்ச்சி.!



ResilienceofSandakozhiVishal whocompleted18years

கடந்த 2005-ஆம் ஆண்டு இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான சண்டக்கோழி திரைப்படம் வெளியாகி நேற்றுடன் 18 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அந்த திரைப்படத்தின் கதாநாயகனான விஷால் தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்.

நடிகர் விஷாலுக்கு அவருடைய திரையுலக பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய ஒரு திரைப்படம் தான் சண்டக்கோழி. லிங்குசாமி இயக்கத்தில் 2005-ஆம் வருடம் வெளியாகி, சூப்பர் ஹிட் திரைப்படம் என பெயரெடுத்தது சண்டக்கோழி. இந்த திரைப்படத்தில் கதாநாயகன் விஷாலுக்கு இணையாக ராஜ்கிரணின் நடிப்பும் பேசப்பட்டது. அதேபோன்று இந்த திரைப்படத்தில் யுவன் சங்கர் ராஜாவின் துள்ளலான இசையும், இந்த திரைப்படத்தின் கதாநாயகியான மீரா ஜாஸ்மினின் குறும்புத்தனமும் ரசிகர்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. இந்த திரைப்படம் வெளியாகி நேற்றுடன் 18 வருடங்களை நிறைவு செய்திருக்கிறது.

Sandakkoxhi

இந்த நிலையில் தான், இந்த திரைப்படத்தின் கதாநாயகனான விஷால், தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் இந்த திரைப்படம் குறித்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த விவகாரம் பற்றி அவர் தெரிவித்திருப்பதாவது,18 ஆண்டுகளுக்கு முன்பு சண்டக்கோழி என்ற மாயாஜாலத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஆக்‌ஷன் ஹீரோவாக என் வாழ்க்கையை உருவாக்கிய இந்த நாளில் நான் அனுபவிக்கும் உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளை வார்த்தைகளால் சொல்ல முடியாது. மேலும் என்னை நம்பிய என் பெற்றோர், என் இயக்குநர் லிங்கு (சாமி), அவர்களின் வரிசையில் மேலே உள்ள கடவுளுக்கும் (சாமி) நான் வணங்கி நன்றி கூறுகிறேன்.

Sandakkoxhi

இறுதியாக உலகளவில் பார்வையாளர்கள் வடிவில் திரையரங்குகளில் நான் பார்க்கும் கடவுளுக்கு நன்றி. உங்கள் அனைவருக்கும் எப்போதும் கடமைப்பட்டுள்ளேன். எனது தந்தை ஜி.கே.ரெட்டி மற்றும் எனது குரு அர்ஜுன் ஆகியோரின் இந்த கனவை தொடருவேன். நன்றி மட்டும் போதாது என்பது எனக்குத் தெரியும். கடவுள் ஆசீர்வதிக்கட்டும். என அவர் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.