96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
அடித்து நொறுக்கும் ரவுடி பேபி வீடியோ பாடல்! இதுவரை எத்தனை பேர் பார்த்துள்ளார்கள் தெரியுமா?
தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் சில வாரங்களுக்கு முன்பு வெளியான படம் மாரி 2 . மாரி முதல் பாகம் வெளியாகி வெற்றிபெற்ற நிலையில் அதன் இரண்டாம் பாகம் மாரி 2 வெளியானது. முதல் பாகம் வெற்றிபெற்ற அளவிற்கு இரண்டாம் பாகம் வெற்றிபெறவில்லை. முதல் பாகத்தில் நாயகியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். மாரி 2 படத்தில் கதாநாயகியான ப்ரேமம் பட புகழ் சாய் பல்லவி நடித்திருந்தார்.
படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறாவிட்டாலும், படத்தில் வந்த ரௌடி பேபி பாடல் உலகளவில் மாபெரும் சாதனை படைத்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையில், தனுஷ் பாடல் வரிகளில், தனுஷ், தீ பாடிய ரௌடி பேபி பாடல் யூடியூபில் மிகவும் குறுகிய காலத்தில் 15 கோடி பார்வைகளை கடந்துள்ளது. உலக அளவில் அதிக பார்வைகளை கொண்ட என்ற பெருமையை பெற்றுள்ளது ரௌடி பேபி பாடல்.
ரவுடி பேபி பாடலின் லைக், ‘ஒய் திஸ் கொலவெறி லைக்கான 12 லட்சத்தை கடந்து 13 லட்சத்தை பெற்று அதிலும் ஒரு சாதனையைப் படைத்துள்ளது. இதையடுத்து யுவன் ஷங்கர் ராஜாவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
மேலும் ரவுடி பேபி பாடலின் இந்த வெற்றிக்கு இசை, பாடல் வரிகள், பாடல் பாடியவர்கள் என ஒருபக்கம் இருந்தாலும் சாய் பல்லவியின் நடனம்தான் இந்த பாடலின் மாபெரும் வெற்றிக்கு மிக முக்கிய காரணம்.