96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
அச்சச்சோ.. சாய் பல்லவியை திடீரென்று அடித்த அவரின் அம்மா.! சாய்பல்லவியின் காதல்தான் காரணமா.?
கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் சாய் பல்லவி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்து வருகிறார். மலையாளத்தில் இவர் நடிப்பில் வெளியான 'பிரேமம்' திரைப்படத்தில் இவரின் நடிப்பு பாராட்டப்பட்டு இப்படம் மிகப்பெரிய ஹிட்டாகியது.
மேலும், இவர் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான 'மாரி 2'திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இதன்பின் சூர்யாவுடன் 'என் ஜி கே' திரைப்படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் சாய் பல்லவி நடிப்பில் வெளியான 'கார்கி' திரைப்படத்தின் மூலம் தமிழ் மக்களின் மனதை கவர்ந்து பாராட்டைப் பெற்றார்.
இவரின் நடிப்பாலும் அழகாலும் மக்களின் மனதை கவர்ந்த சாய் பல்லவி, சமீபத்தில் பேட்டி ஒன்றில் அவரின் சிறு வயது காதலை குறித்து பேசியிருக்கிறார். அவர் கூறியதாவது,"நான் ஏழாவது படிக்கும்போது என்னுடன் படித்த மாணவன் ஒருவனை காதலித்தேன்.
அவனுக்காக காதல் கடிதம் ஒன்றை எழுதி என் புத்தகத்தில் வைத்திருந்தேன். இதனை என் அம்மா பார்த்து என்னை அடித்தார். இதன் பிறகு என் வாழ்க்கையில் காதல் என்பதே இல்லாமல் போய்விட்டது. என் அம்மாவை கஷ்டப்படுத்தும் விதமாக நான் நடந்து கொள்ள மாட்டேன் என்று பேட்டியில் பேசியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.