96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
எல்லோரையும் சிரிக்க வைக்கும் ஈரோடு மகேஷ் வாழ்வில் இப்படி ஒரு சோகமா! அதிர்ச்சி தகவல்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் பிரபலமானவர் ஸ்டாண்டப் காமெடியன் ஈரோடு மகேஷ். தனது அடுக்கடுக்கான காமெடி, இலக்கிய பேச்சில் அனைவரும் தன் பக்கம் இழுக்கும் மிக சிறந்த பேச்சாளர்.
சன் தொலைக்காட்சியில் இருந்து விஜய் தொலைக்காட்சிக்கு சென்ற இவர் ஸ்டாண்ட் அப் காமெடியன், நிகழ்ச்சித் தொகுப்பாளர், நடுவர், நடிகர் என பல அவதாரங்களை எடுத்துவிட்டார். மேடையில் ஏறி நம் அனைவரையும் சிரிக்க வைக்கும் ஈரோடு மகேஷ் வாழ்வில் இப்படியும் ஒரு சோகம் உள்ளதாம்.
அதாவது, ஈரோடு மகேஷ் செய்யும் காமெடிகளை நாம் பார்த்து, கேட்டு ரசிக்கலாம். சத்தமாகச் சிரிக்கலாம். ஆனால், ஈரோடு மகேஷின் அம்மாவால் தனது மகன் என்ன பேசுகிறான் என்பதை கேட்க கூட முடியாதாம். தனது மகன் பிறந்ததில் இருந்தே அவரது குரலை அவரது தாய் கேட்டதே இல்லையாம்.
மற்றவர்கள் சிரிப்பதை பார்த்துதான் மகேஷின் அம்மா மீனாட்சி சிரிப்பாராம். அவருக்கு 28 வயது இருக்கும்போது அவரது கேட்கும் திறனை இழந்துள்ளார் மகேஷின் தாய் மீனாட்சி.