ஷகீலா நிஜத்தில் வேறமாதிரி..! உண்மையை கசியவிட்ட நடிகை..!



Sakila in rea lifel

மலையாளத் திரைப்படமான ப்ளே கேள்ஸ் திரைப்படம் மூலம் துணை நடிகையாக அறிமுகமானார் சகிலா. பின்னர் குணசித்திர வேடங்களிலும், நகைச்சுவை வேடங்களிலும் நடிக்கும் இந்திய நடிகையாவார். இவர் பாலுணர்வுக் கிளர்ச்சியத் திரைப்பட நடிகையுமாவார்.

இவர் நடிப்பில் வெளிவந்த கிணரத்தும்பிகள் எனும் மலையாளப்படம் பெரும் வெற்றி பெற்றது. மலையாளப் படங்களில் பெரிதும் பேசப்பட்ட இவர் 110க்கும் மேற்பட்ட தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி படங்களில் நடித்துள்ளார்.மறுமலர்ச்சி திரைப்படத்தில் விவேகிற்கு ஜோடியாக நடித்துள்ளார்.

sakila

குணசித்திர வேடங்களிலும் நகைச்சுவை வேடங்களிலும் நிறைய தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். ஜெயம், அழகிய தமிழ்மகன், பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற தமிழ்ப் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.தற்போது சினிமாவில் அதிகம் நடிப்பதில்லை என்றாலும் அவருக்கு அதிகம் ரசிகர்கள் உள்ளனர்.

sakila

அவரின் வாழ்க்கை வரலாறை தற்போது திரைப்படமாக எடுக்கவுள்ளனர். அதில் பாலிவுட் நடிகை ரிச்சா சத்தா ஷகீலாவாக நடிக்கவுள்ளார்.படத்தின் ஷூட்டிங் துவங்கும்முன் அவர் பெங்களூரில் ஷகீலாவை நேரில் சந்தித்து பேசியுள்ளார். அந்த சந்திப்பு பற்றி பேட்டியளித்துள்ள அவர் “ஷகீலா படத்தில் மட்டும் தான் அப்படி நடிக்கிறார். நிஜ வாழ்க்கையில் அதிகம் கூச்ச சுபாவம் கொண்டவர்” என கூறியுள்ளார்.