குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
தனுஷ் பட நடிகை மூலம் பாலிவுட்டில் கதாநாயகியாகும் சமந்தா! அட.. யார்னு பார்த்தீங்களா! வெளிவந்த சூப்பர் தகவல்!!
தமிழ் சினிமாவில் பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்ததன் மூலம் முக்கிய நாயகியாக திகழ்ந்து வருபவர் சமந்தா. அவரது கைவசம் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல், சாகுந்தலம் என ஏராளமான படங்கள் உள்ளன. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகரான நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவரும் அண்மையில் தாங்கள் பிரியவிருப்பதாக அறிவிப்பு வெளியிட்டனர்.
இந்நிலையில் அந்த விவாகரத்திற்கு காரணம் சமந்தாதான் என அவரைக் குறித்த தவறான அவதூறு கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பரவத் துவங்கியது. இந்நிலையில் இதுகுறித்து சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்திருந்தார். மேலும் இதிலிருந்து வெளியே வர போட்டிங், சைக்கிளிங், ஆன்மீக சுற்றுலா என தனது கவனத்தை திசைதிருப்பி வருகிறார். மேலும் தொடர்ந்து பல படங்களில் கமிட்டாக்கி பிஸியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சமந்தா, தமிழ் சினிமாவில் ஆடுகளம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை டாப்ஸி பாலிவுட்டில் தயாரிக்கவிருக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. மேலும் இப்படம் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படம் எனவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.