96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
சர்க்கார் பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது அமைச்சர் கடம்பூர் ராஜு; விஜய் ரசிகர்கள் நிம்மதி.!
சர்க்கார் படத்திலிருந்து சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதால் படமானது வழக்கம்போல் இன்று மதியம் முதல் அனைத்து திரையரங்குகளிலும் திரையிடப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் சற்று நிம்மதி அடைந்து உள்ளார்கள்.
சர்கார் திரைப்படத்தில் தமிழக அரசை விமர்சிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய காட்சிகளை அரசியல் நோக்கத்துக்காக படத்தில் சேர்த்துள்ளனர். இதனை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இது வளர்ந்து வரும் நடிகர் விஜய்க்கு நல்லது அல்ல. மத்திய அரசின் திரைப்பட தணிக்கை துறையில், மத்திய அரசால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களே அங்கம் வகிக்கின்றனர். அவர்கள்தான் திரைப்படங்களை பார்த்து சான்றிதழ் வழங்குகின்றனர்.
எனவே இதற்கும், மாநில அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனவே சர்கார் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை அவர்களாக நீக்கவில்லையெனில், அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை நடத்துவோம் என்று கடம்பூர் ராஜு தெரிவித்தார்.
அவரை தொடர்ந்து அமைச்சர்கள் சண்முகம் மற்றும் ஜெயக்குமார் படத்தை பற்றியும் நடிகர் விஜயை பற்றியும் கடுமையான விமர்சனங்களை வைத்தனர்.
இந்நிலையில், மதுரை, கே.கே.நகரில் உள்ள சினிப்பிரியா தியேட்டர் முன்பாக அதிமுக., எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா தலைமையில் 100-க்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும். உடனடியாக இப்படத்தை நிறுத்த வேண்டும் என கோஷமிட்டனர். மேலும் இந்தபோராட்டம் தமிழகம் முழுவதும் தொடரும், சர்கார் படத்தை எங்கும் திரையிட அனுமதிக்க மாட்டோம் என கோஷமிட்டனர். அதிமுக.,வினரின் எதிர்ப்பால் அந்த தியேட்டரில் நண்பகல் 2.30 மணி காட்சி ரத்து செய்யப்பட்டது.
மதுரையை தொடர்ந்து கோவை, தேனி, திருச்சி, நெல்லை, கடலூர், விழுப்புரம், ஊட்டி சென்னையிலும் சர்கார் படத்திற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. சென்னையில் காசி தியேட்டர் முன்பு ஏராளமான அதிமுக., தொண்டர்கள் கூடி சர்கார் படத்திற்கு எதிராக கோஷம் எழுப்பியதோடு, அங்கு வைக்கப்பட்டிருந்த சர்கார் பட போஸ்டர், பேனர்களை அடித்தும், கிழித்தும் துவம்சம் செய்தனர்.
எதிர்ப்பு வலுத்ததால் சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இன்று நீக்கப்பட்டு மறு தணிக்கை முடிந்துள்ளது.
இதுகுறித்து பேசிய தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர் சங்க இணைச்செயலாளர் ஸ்ரீதர், இன்று மதியம் அல்லது மாலையில் திரையிடப்படும் காட்சிகளில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெறாது என்று கூறினார்.
அதன்படி, மிக்ஸி, கிரைண்டர், ஃபேன் ஆகியவற்றை தூக்கி நெருப்பில் எரியும் காட்சி மற்றும் வரலட்சுமி கதாபாத்திரத்தின் பெயர் கோமளவல்லி என்பதை ஆடியோ கட் செய்யப்படுகிறது. இனிமேல் இந்த காட்சிகள் இடம்பெறாது.
இதைத் தொடர்ந்து சர்கார் படத்தை திரையிட தணிக்கைக் குழு ஒப்புதல் தெரிவித்துள்ளது. முன்னதாக சர்கார் பட விவகாரம் தொடர்பாக, முதலமைச்சர் பழனிசாமி உடன் அமைச்சர் கடம்பூர் ராஜு ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து பேசிய அவர், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கியதால், சர்க்கார் பட பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது. முதலமைச்சரை சந்திக்க நடிகர் விஜய் நேரம் எதுவும் கேட்கவில்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.