குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
இராஜராஜசோழன், மறைந்த விடுதலைப்புலிகள் தலைவர் பிராபகரனின் சரித்திரத்தை இயக்கும் வெற்றிமாறன்.. சீமான் அதிரடி அறிவிப்பு..!!
திரைத்துறையில் தனித்துவமான இயக்குனராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு நடிகராகவும், தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் இளம் அரசியல் தலைவர்களுள் ஒருவராக இருந்து வருபவர் சீமான்.
இவர் தற்போது சினிமாவில் முழுமையாக நடிக்கவில்லை என்றாலும் முழுநேர அரசியல் களப்பணியில் இறங்கியுள்ளார். இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் சீமான், "மறைந்த விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் வாழ்க்கையை வெற்றிமாறன் படமாக இயக்குவார் என்றும், அந்த படத்தை தானே தயாரிக்கப் போவதாகவும் தெரிவித்திருந்தார்.
மேலும் ராஜராஜ சோழனின் உண்மையான வரலாற்றையும் வெற்றிமாறன் இயக்குவார்" என்று தெரிவித்துள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் முன்பே அவர் இராஜராஜ சோழன் இந்து கிடையாது சைவத்தை சார்ந்தவர் எனக்கூறியது குறிப்பிடத்தக்கது.