96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
சீமராஜா படத்தை வெளியிட தடை, உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் மூலமாக அறிமுகமாகி அனைவரின் மனதையும் கொள்ளை அடித்தவர் சிவகார்த்திகேயன்.
இவர் தற்போது இயக்குனர் பொன்ராம் உடன் மூன்றாவது முறையாக இணைந்து சீமராஜா என்னும் படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் கதாநாயகியாக சமந்தா நடிக்கின்றார். அத்துடன் சூரி, நெப்போலியன், சிம்ரன், லால், ராஜேந்திரன், மனோபாலா மற்றும் யோகிபாபு போன்ற பல பிரபலங்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்
இப்படத்துக்கு இமான் இசையமைத்துள்ளார். 24AM நிறுவனம் சார்பில் ராஜா இப்படத்தினை தயாரிக்கிறார். இந்நிலையில், இந்த படம் செப்டம்பர் 13 விநாயகர் சதுர்த்தி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, சீமராஜா படத்தின் பாடல்கள் மற்றும், படத்தின் டீஸர், ட்ரெய்லர் அதிகாரப்பூர்வமாக வெளியானது.
இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடித்துள்ள "சீமராஜா" படத்தை சட்ட விரோதமாக இணையதளங்கள் வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.