96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
விஜய், அஜித்திற்கு அடுத்தது சிவகார்த்திகேயன்! சீமராஜா திரைப்படத்திற்கு கிடைத்தது மற்றுமொரு பெருமை!
இயக்குனர் பொன் ராம் இயக்கத்தில் நடிகர்கள் சிவர்கார்த்திகேயன், நெப்போலியன், சூரி, நடிகை சமந்தா நடித்துள்ள படம்தான் சீமராஜா. பொன்ராம், சிவகாா்த்திகேயன், சூரி கூட்டணியில் இது அவர்களுக்கு மூணாவது படம்.
இதில் சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக நெப்போலியனுக்கு, வில்லியாக சிம்ரனும் நடித்துள்ளார். படத்தின் டப்பிங் முடிவு பெட்ரா நிலையில் இத்திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் திரைக்கும் வரும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் சந்தோஷத்தில் உள்ளனர்.
24 ஏஎம் ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்து வெளியிடும் இத்திரைப்படத்திற்கு தணிக்கைக்குழுவாள் யூ சான்றிதழ் வழங்கியுள்ளது இந்திரைப்படத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளது.
இந்நிலையில் சீமராஜா திரைப்படம் தற்போது போலந்து நாட்டில் வெளியாக உள்ளது. முதல் முறையாக போலந்து நாட்டில் வெளியாகும் சிவகார்த்திகேயன் படம்.
முன்னணி நடிகர்கள் ரஜினி,விஜய்,அஜித்,சூர்யாவிற்கு அடுத்தபடியாக சிவகார்த்திகேயனின் படம் போலந்து நாட்டில் திரையிடப்பட உள்ளது.இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.