செம்பருத்தி சீரியல் நடிகர் ஆதித்யாவின் உண்மையான மனைவி யார் தெரியுமா? இதோ அவரது புகைப்படம்!
பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனமான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் கார்த்திகேயன். அதை தொடர்ந்து ஆபீஸ் என்ற தொடரில் நடித்து பிரபலமானார்.
இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி நாடகத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவர் மூலம் அந்த தொலைக்காட்சிக்கு டி.ஆர்.பி அதிகரித்து கொண்டே போகின்றது.
செம்பருத்தி நாடகத்தில் பெண்களின் மனங்களை கொள்ளை கொள்ளும் அளவுக்கு சிறப்பாகவும், அமைதியாகவும் திறமையை வெளிகாட்டி வருபவர் ஆதி என்ற கார்த்திகேயன். இவர், கனா காணும் காலங்கள் நாடகம் மூலம் தொலைக்காட்சி தொடரில் நடிக்க வந்தார்.
இதேவேளை, அவர் கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் போது யாசினி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவரது மனைவி புகைப்படம் இதோ.