96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
சத்தமே இல்லாமல் அவசர அவசரமாக காதலரை கரம்பிடித்த நடிகை நட்சத்திரா.! திடீர் திருமணத்திற்கு இதுதான் காரணமா!!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று, சில மாதங்களுக்கு முன்பு முடிவடைந்த தொடர் ‘யாரடி நீ மோகினி’. இந்த தொடரில் முக்கிய கதாநாயகியாக ’வெண்ணிலா’ என்கிற கதாபாத்திரத்தில் அப்பாவிப் பெண்ணாக நடித்து பிரபலமானவர் நட்சத்திரா. இத்தொடரின் மூலம் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர்.
நடிகை நட்சத்திரா தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி ரசிகர்களை கவர்ந்து வரும் 'வள்ளி திருமணம்' என்ற சீரியலில் ஹீரோயினாக வள்ளி என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பு நடிகையும், நட்சத்திராவின் தோழியுமான ஸ்ரீநிதி நட்சத்திரா திருமணம் செய்துகொள்ளவிருப்பவர், அவரது குடும்பத்தினர் மோசமானவர்கள் எனவும் அவரை திருமணம் செய்தால் நட்சத்திராவிற்கு விஜே சித்ராவின் நிலைதான் வரும் எனவும் பல தகவல்களை வெளியிட்டிருந்தார்.
அதற்கெல்லாம் மறுப்பு தெரிவித்து நட்சத்திராவும் வீடியோ வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் நட்சத்திராவிற்கும் அவரது காதலரான விஷ்வாவிற்கும் சத்தமே இல்லாமல் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் கோவிலில் திருமணம் நடைபெற்றுள்ளது. விஷ்வா ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நிர்வாக பணிகளை செய்து வருகிறாராம்.
அவர்களது திருமண புகைப்படங்களை கண்ட ரசிகர்கள் நட்சத்திராவின் திடீர் திருமணத்திற்கு காரணம் என்ன என கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த நிலையில் நட்சத்திராவை தூக்கி வளர்த்த தாத்தா உடல்நலம் சரியில்லாமல் இருப்பதாகவும், அவரது ஆசைப்படியே திருமணம் நடைபெற்றதாகவும் தகவல் பரவி வருகிறது.