அப்பாவும் பொண்ணும் எவ்வளவு அழகா என்ன பன்றாங்கனு பாருங்க.! வீடியோவை வெளியிட்ட ரோஜா சீரியல் நடிகை.



serial-actress-shamili-daughter-cute-video

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் ரோஜா தொடரில் முதலில் அனு என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள்  மத்தியில் மாபெரும் வரவேற்பை  பெற்றவர் ஷாமிலி சுகுமார்.  அவர் தனக்கு கொடுத்த நெகடிவ் கதாபாத்திரத்திற்கு ஏற்ப மிகவும் அருமையாக தனது நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இவரது நடிப்பு அனைவரையும் மிரள வைத்தது.

இந்நிலையில் ஷாமிலி கர்ப்பமாக இருந்த நிலையில் கொரோனா  காலம் என்பதால் ரோஜா தொடரை விட்டு பாதியிலேயே விலகினார். இவருக்கு சமீபத்தில்  ஒரு அழகான  பெண் குழந்தை  பிறந்தது. மேலும் சமூக வலைதளங்களில் பிசியாக இருக்கும் அவர் அவ்வப்போது  புகைப்படங்கள் மற்றும் குழந்தையின் வீடியோக்களைவெளியிட்டு வருகிறார்.

தற்போது அவரது மகளும், கணவரும் ஒரே பொசிஷன்னில் தூங்கும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்ட்ராகிராம்மில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.