96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
அவர் பெயரை சொன்னாலே சர்ச்சைதான்!! TRP யை எகிறவைக்க பிக்பாஸ் 6ல் சர்ச்சை நடிகை?
பிக்பாஸ் சீசன் 6 ல் சர்ச்சை நாயகி ஒருவர் களமிறக்கப்படலாம் என்ற தகவல் தற்போது காட்டுத்தீபோல் பரவிவருகிறது.
விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகப்போகிறது என்றாலே ரசிகர்கள் மத்தியில் ஒரு பரபரப்பு தொற்றிக்கொள்ளும். இந்த முறை யாரெல்லாம் வர போகிறார்கள்? எத்தனை போட்டியாளர்கள் என்று பல கேள்விகளும், இவர் வருகிறார், அவர் வருகிறார் என நாளுக்கு நாள் புது புது தகவல்களும் வரிசைகட்டி நிற்கும்.
இந்நிலையில், விஜய் டிவியில் விரைவில் பிக்பாஸ் சீசன் 6 தொடங்கப்போவதாக தகவல் வெளியாகிவரும்நிலையில், இந்தமுறை சர்ச்சை நாயகி ஒருவரை களமிறக்கி TRP யை எகிற வைக்க விஜய் டிவி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. யார் அந்த சர்ச்சை நாயகி என யோசிக்கிறீங்களா?
சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி தான் அது. திடீர் பேட்டி, சர்ச்சையான பதில், சிம்பு மேல் காதல் என வரிசையாக இவர் மீது பல்வேறு சர்ச்சைகள் எழுந்தவண்ணம் உள்ளது. இந்நிலையில் இவரை பிக் பாஸ் சீசன் 6ல் களமிறக்கி, நிகழ்ச்சியை கலகலப்பாக விஜய் டிவி முடிவு செய்துள்ளதாக செய்திகள் உலா வருகிறது.