தாயின் மரணப்படுக்கையில்.. உருக்கமான பல ரகசியங்களை போட்டுடைத்த நடிகை ஷகீலா! மனம் உருகும் ரசிகர்கள்!



shakeela talk about her cooking and persional secrets

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி அனைவராலும் ரசிக்கப்பட்டு, ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றுவரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி சீசன்2. இந்த நிகழ்ச்சிகென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.  மேலும் அனைவரையும் குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கும் இந்த நிகழ்ச்சியின் ஒரு எபிசோடை கூட தவறாமல் அனைவரும் பார்த்து வருகின்றனர்.

இந்த குக் வித் கோமாளி சீசன் 2வில் போட்டியாளர்களாக அஸ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா லட்சுமி, மதுரை முத்து, பாபா பாஸ்கர், தீபா, கனி ஆகியோர் பங்கேற்றுள்ளனர். மேலும் கோமாளிகளாக பாலா, புகழ், ஷிவாங்கி,மணிமேகலை சுனிதா, டிக்டாக்  சரத் ஆகியோர் ரணகளபடுத்தி வருகின்றனர்.

மேலும் இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் 90களில் ஏராளமான ஆபாச படங்களில் நடித்து கவர்ச்சியால் ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருந்த நடிகை ஷகீலாவும் போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார். தன்னை ஒரு ஆபாச பொருளாக மக்கள் பார்ப்பது மாற வேண்டுமென அனைத்து பேட்டிகளிலும் உருக்கமாக  கூறிவரும் ஷகிலா இந்த நிகழ்ச்சியில் மூலம் தனது திறமையால் அதனை செய்து காட்டியுள்ளார். மேலும் ஷகிலாவை போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகள் அம்மா, மம்மீ என அழைத்து நெகிழ வைக்கின்றனர்.

cook with comali

இந்நிலையில் விதவிதமாக அனைவரையும் வியக்க வைக்கும் வகையில் சமையல் செய்து அசத்தும் நடிகை ஷகீலா சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்தபோது, எனது தாய் மரணப் படுக்கையில் இருந்தபோது தான் சமையல் கற்றுக் கொண்டதாகவும், தந்தையின் அறிவுரையை கேட்டு பொய் சொல்வதை முற்றிலும் தவிர்த்ததாகவும் உருக்கமாக கூறியுள்ளார்.