ஷாலுஷம்மு பட வாய்ப்பு இல்லாததனால் இப்படி ஆகிட்டாரே.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.?



shalu-shammu-latest-photos

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக அறியப்படுபவர் ஷாலு ஷம்மு. இவர் சிவகார்த்திகேயனின் திரைப்படமான 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்தார். முதல் படமே இவருக்கு பெரிதும் பெயர் பெற்று தந்தது.

Shalu

இப்படத்திற்குப் பிறகு ஒரு சில திரைப்படங்களில் நடித்தாலும் இவருக்கு பட வாய்ப்புகள் பெரிதளவில் வரவில்லை. இதனால் தொடர்ந்து போட்டோ சூட் செய்து கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருவார். திரைப்படங்களில் கிடைக்காத பிரபலம் இவரது போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் பல ரசிகர் கூட்டத்தை பெற்றிருந்தார்.

மேலும் இவரின் பல்வேறு ஆண் நண்பர்களுடன் நடனமாடி சல்சா வீடியோ இணையத்தில் பதிவிட்டு வருவார். இந்த வீடியோ அவ்வப்போது சர்ச்சையை கிளப்பி வந்தது. தற்போது இணையத்தில் ஜாகுவார் கார் ஒன்றை வாங்கிய புகைப்படம் வைரலாகி வருகிறது.

Shalu

பட வாய்ப்பு இல்லாமல் எப்படி இவர் இந்த கார் வாங்கினார் என்று இணையத்தில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஷாலு ஷம்மு பிசினஸ் ஒன்றை நடத்தி வருகிறார் இதன் மூலமே இந்த விலையுயர்ந்த காரை செகண்ட் ஹாண்டில் வாங்கியிருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது.