குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
திடீரென்று குடும்ப குத்து விளக்காக மாறிய ஷாலுஷம்மு.. என்ன காரணம் தெரியுமா.?
தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் மட்டும் நடித்து பிரபலமான நடிகையாக இருப்பவர் ஷாலு ஷம்மு. இவர் தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' திரைப்படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்திருப்பார்.
படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். திரைப்படங்களில் நடித்திருந்தாலும் மாடலிங் மூலமே இவர் ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்திற்கு பின்பு பட வாய்ப்புகள் குறைந்ததால் தொடர்ந்து மாடலிங் துறையில் பணிபுரியும் ஷாலு ஷம்மு, அடிக்கடி கவர்ச்சியாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.
ஆனால் படவாய்ப்பிற்காக தற்போது குடும்ப குத்து விளக்கு போல் புடவையணிந்து அழகாக போட்டோ சூட் செய்து புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இப்புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.