ஜவான் இசை வெளியீட்டு விழாவிற்கு வரவில்லை என்று கூறிய ஷாருக்கான்.? கட்டாயப்படுத்திய அட்லி..
"ராஜா ராணி" படம் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. முன்னதாக இவர் இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இவர் விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார்.
இந்நிலையில், அடுத்து அட்லீ ஹிந்தி படத்தை இயக்கப்போவதாக அறிவித்தார். இதனைதொடர்ந்து ஷாருக்கானை வைத்து "ஜவான்" படத்தை இயக்கியுள்ளார். ஜவான் திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் என 5 மொழிகளில் வெளியாகவுள்ளது.
வரும் செப்டம்பர் 7ம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இவ்விழாவில் படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய அட்லீ, "ஜவான் இசை வெளியீட்டு விழாவிற்கு நான் வரவேண்டுமா? என்று ஷாருக்கான் என்னிடம் கேட்டார். மேலும் வேற்று மொழி நடிகன் என்னை உங்கள் ஊரில் மதிப்பார்களா? என்றும் கேட்டார். உங்கள் மீதான எங்கள் அன்பை நேரில் வந்து தெரிந்துகொள்ளுங்கள் என்று நான் கூறினேன்" என்று அட்லீ கூறினார்.