குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
செம குத்தாட்டம் போட்ட ஷிவானி.. வடிவேலுவே தோத்து போய்ட்டாரு.. வைரலாகும் வீடியோ..
தலைவன் வடிவேலு பாட்டுக்கு செம குத்தாட்டம் போட்ட நடிகை ஷிவானியின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் ஷிவானி. அதன்பிறகு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இரட்டை ரோஜா என்ற தொடரில் நடித்துவந்தார். பின்னர் மீண்டும் விஜய் டிவி பக்கம் சென்ற இவர் பிக்பாஸ் சீன் நான்கில் கலந்துகொண்டு இறுதிவரை சென்றார்.
தொடர்ந்து சீரியலில் பிசியாக இருக்கும் இவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினமும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அதிலும் இவர் பதிவிடும் பெரும்பாலான புகைப்படங்கள் கவர்ச்சியாகத்தான் இருந்து வருகிறது.
இந்நிலையில் நடிகர் வடிவேலு பாடி, நடனம் ஆடிய, வாடி பொட்டப்புள்ள பாடலுக்கு நடிகை ஷிவானி நடனம் ஆடியுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.