கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
"எட்டு ஆண்டுகள் என்னை ஆட்டிப் படைத்த விஷயம் இந்த போதை தான்!" ஸ்ருதி ஹசன் ஓபன் டாக்!
பாடகி, இசையமைப்பாளர் மற்றும் நடிகை என பன்முகத் திறமை கொண்டவர் ஸ்ருதி ஹாசன். இவர் நடிகர் கமலஹாசனின் மூத்த மகள் ஆவார். இவர் தனது தந்தை நடித்த "தேவர் மகன்" படத்தில் இடம்பெற்ற "போற்றிப் பாடடி பெண்ணே" பாடலை தனது 6 வயதில் பாடினார்.
இதையடுத்து தொடர்ந்து ஹேராம், என் மன வானில், வாரணம் ஆயிரம், உன்னைப் போல் ஒருவன், ஏழாம் அறிவு, மான் கராத்தே, வேதாளம், இது நம்ம ஆளு, கடாரம் கொண்டான், புலி உள்ளிட்ட பல படங்களில் பல பாடல்களைப் பாடியுள்ளார் ஸ்ருதி ஹாசன்.
2000ம் ஆண்டு "ஹேராம்" படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் அறிமுகமான இவர், 2011ம் ஆண்டு "ஏழாம் அறிவு" படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ள ஸ்ருதி ஹாசன், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ஒரு பேட்டியில் பேசிய ஸ்ருதி ஹாசன், "எட்டு ஆண்டுகள் நான் மதுவுக்கு அடிமையாக இருந்தேன். மது என் வாழ்க்கையை ஆட்டிப் படைத்தது. அதிலிருந்து மீண்டு விட்டேன். அதுகுறித்து இப்போது நான் கவலைப்படவில்லை. அது என் வாழ்க்கையில் ஒரு கட்டம் தான்" என்று கூறியுள்ளார்.