ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
கணவருடன் லைவில் சிம்ரன் செய்த செயல்.. வைரலாகும் வீடியோ.!
கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் சிம்ரன். இவர் தமிழில் பல படங்களில் நடித்த பிரபல நடிகையாக அறியப்படுகிறார். முதன் முதலில் 1997 ஆம் ஆண்டு வெளியான 'ஒன்ஸ்மோர்' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
இதன் பிறகு பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார். இதில் நேருக்கு நேர், நட்புக்காக, துள்ளாத மனமும் துள்ளும், வாலி, ஜோடி, பிரியமானவளே, பஞ்சதந்திரம், கன்னத்தில் முத்தமிட்டால், நியூ, வாரணம் ஆயிரம் போன்ற திரைப்படங்கள் மிகப்பெரிய ஹிட்டாகியது.
நடிகை சிம்ரன் 2003 ஆம் ஆண்டு தீபக் வாகா என்னும் நபரை திருமணம் செய்து கொண்டார். இதன் பின்னும் தொடர்ந்து படங்களில் நடித்த சிம்ரன் 2008 ஆம் ஆண்டிற்கு பிறகு பட வாய்ப்புகள் பெரிதும் இல்லாததால் நடிப்பதில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்டார்.
இது போன்ற நிலையில், சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சிம்ரன் அடிக்கடி தனது புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு வருவார். அவ்வாறு தனது கணவருடன் நடனமாடி வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.