குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
கமலஹாசன் திரைப்படத்தில் நடிக்க மறுத்த சிம்பு.. என்ன காரணம் தெரியுமா.?
'விக்ரம்' திரைப்படத்தை தொடர்ந்து திரு. கமல்ஹாசன் அவர்களுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. 'இந்தியன் 2' படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் எச்.வினோத் தயாரிக்கும் 'KH233' படத்திலும் நடிக்கவிருக்கிறார் கமல். அதில் ராணுவ வீரர் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க துப்பாக்கி சூடு பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கமலஹாசன் தயாரிப்பில் பிரபாஸ் ஹீரோவாக நடித்து வரும் "கல்கி 2898" என்ற படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் கமல் நடிக்கவுள்ளார் .மேலும் கமல், மணிரத்தினம் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. கமல் நடிக்கவிருக்கும் "KH234" திரைப்படத்தை மணிரத்தினம் இயக்கவிருக்கிறார் .அதில் இளம் கலெக்டராக வரும் கதாபாத்திரத்திற்கு சிம்பு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆனால் சிம்பு நடித்துக் கொண்டிருக்கும் STR48 திரைப்படத்தில் வரலாற்று பின்னணி கதாபாத்திரத்திற்காக அவர் நீண்ட தலை முடியை வளர்த்து வருவதாகவும். அந்த கெட்டப் கமல்ஹாசன் திரைப்படத்திற்கு பொருந்தாது என்பதால் சிம்பு கமல் திரைப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவிக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகிவுள்ளன. அந்த கதாபாத்திரத்திற்கு சிம்புவுக்கு பதிலாக துல்கர் சல்மான் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.