மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கூல் சுரேஷுக்கு என்ன ஆச்சு..? விறுவிறுப்பாக தயாராகும்.. சிம்புவின் பத்து தல டீம்.. ரசிகர்களே.. நீங்க ரெடியா.?!
சிறுவயதில் குழந்தை நட்சத்திரமாக கோலிவுட் சினிமாவில் நடித்து முன்னணி நடிகராக இருப்பவர் சிம்பு. இவர் முதன்முதலில் டி ராஜேந்திரன் இயக்கிய காதல் அழிவதில்லை திரைப்படத்தின் நாயகனாக அறிமுகமானார். அதன் பின்பு பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்து STR, சிலம்பரசன் போன்ற பட்டப்பெயர்களை வென்றார்.
கடந்த காலங்களில் இவர் வந்தா ராஜாவாதான் வருவேன், அன்பானவன் அசராதவன் அடங்காதவன், ஈஸ்வரன் போன்ற சில படங்களில் நடித்து தொடர் தோல்வி ஏற்பட்டது. மேலும் இவர் படப்பிடிப்பிற்கு வருவதில்லை என்று தயாரிப்பாளர்கள் இவர் மீது குற்றம் சாட்டினார்கள். அதன் பிறகு நடிப்புக்கு பிரேக் விட்ட சிலம்பரசன் மீண்டும் மாநாடு திரைப்படத்தில் நடிக்க தொடங்கினார்.
2021 ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படம் சிம்பு நடித்து வெளியானது. இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்தப் படத்திற்கு பின்பு சிலம்பரசன் நடித்த வெந்து தணிந்தது காடு படமும் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில், இவர் பத்துதல படத்தின் கதாநாயகனாக ஒப்பந்தமாகி படப்பிடிப்பு நடைபெற்றது.
இதன்படி சிம்புவின் பிறந்தநாளான பிப்ரவரி 3ஆம் தேதி பத்து தல படத்தின் 'நம்ம சத்தம்' என்ற பாடல் வெளியானது. மேலும் படத்தின் டீசர் ரிலீஸ் மற்றும் படத்தின் வெளியீட்டு தேதியையும் படக்குழு அறிவித்த நிலையில் சிலம்பரசனின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இதை கொண்டாடி வருகின்றனர். பத்து தல படம் மார்ச் 30 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இதன் ப்ரமோஷன் பணிகளை செய்ய படக்குழு வேற லெவல் திட்டம் போட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பலரும் எதிர்பார்க்காத அளவுக்கு அந்த ப்ரமோஷன் இருக்கும் எனவும், STR ரசிகர்கள் கொண்டாட தயாராகுஙகள் எனவும் மறைமுக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சிம்பு, ப்ரமோஷன் என்றாலே அனைவரது நினைவுக்கும் வருவது கூல் சுரேஷ் தான். ஆனால், அவர் சில நாட்களாக அமைதியாக இருப்பது சரியாகப்படவில்லை என்றும் ஏதாவது க்ளாஷ் ஆகி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.