#JustIN: நடிகர் சைப் அலிகானை கத்தியால் குத்தியது யார்? சிசிடிவி கேமரா காட்சியில் புதிய திருப்பம்.!
சிம்ரன் வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ச்சியான ரசிகர்கள்! இதான் விஷயமா?
90 இல் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை சிம்ரன். விஜய், அஜித், விஜயங்காந்த், கமல் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் நடிகை சிம்ரன். அதன்பின்னர் சினிமாவை விட்டு விலகிய இவர் குடும்ப வாழ்க்கையில் பிஸியாகிவிட்டார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா படத்தில் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சிம்ரன். அதன்பின்னர் சூப்பர் ஸ்டார் நடித்த பேட்ட படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது த்ரிஷாவுடன் சேர்ந்து ஒரு படத்திலும், நடிகர் மேலும் மாதவனுக்கு மனைவியாகவும் ஒரு படத்தில் நடித்துவருகிறார்.
இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வித்தியாசமான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை சிம்ரன். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சிம்ரன் உங்களுக்கு என்னாச்சு என கேள்வி கேட்டு வருகின்றனர்.