96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
திருப்பூர் மாவட்ட சப்- கலெக்டராக பொறுப்பேற்றுள்ள பிரபல நடிகரின் மகன்.! யார் தெரியுமா?? குவியும் வாழ்த்துக்கள்!!
தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக வலம் வந்தவர் நடிகர் சின்னி ஜெயந்த். சினிமா துறையை சேர்ந்த பிரபலங்கள் பலரும் தங்களது வாரிசுக்களை திரையிலகிற்குள் கொண்டு வரும் நிலையில் நடிகர் சின்னி ஜெயந்த் தனது மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணனை நன்றாக படிக்க வைத்துள்ளார். அவர் யூபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 75வது இடத்தைப் பெற்றார்.
தமிழகத்தில் பல்வேறு பகுதியில் பயிற்சி பெற்று வந்த சப்-கலெக்டர்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு சப்-கலெக்டராக நியமிக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் சப்-கலெக்டராக பயிற்சி பெற்று வந்த ஸ்ருதன் ஜெய் நாராயணன் திருப்பூர் சப்-கலெக்டராக பணி நியமனம் செய்யப்பட்டு இன்று காலை அவர் பொறுப்பேற்றுள்ளார்.
அதனை தொடர்ந்து பேசிய அவர், திருப்பூர் மக்களின் நலன் சார்ந்தே எனது முழு உழைப்பும் இருக்கும். சினிமாதுறையை சேர்ந்தவர்களாக இருந்தாலும் என் பெற்றோர் சிறு வயதிலிருந்தே கல்விதான் முக்கியம் என கூறிவந்தனர். அவர்களுக்கு எனது நன்றி என கூறியுள்ளார். இந்நிலையில் சப்-கலெக்டராக பொறுப்பேற்றுள்ள ஸ்ருதன் ஜெய் நாராயணனுக்கு பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.